Wednesday, July 6, 2011

சி.பி.ஐ அதிகாரிகள் சொத்துவிபரத்தை வெளியிடவேண்டும்-தகவல் உரிமை கமிஷன்

sep06-Sandeep
புதுடெல்லி:சொத்து விபரத்தை வெளிப்படுத்த வேண்டும் என டெல்லி, மும்பையை சார்ந்த சி.பி.ஐ அதிகாரிகளுக்கு மத்திய தகவல் உரிமை கமிஷன் உத்தரவிட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகால சொத்து விபரத்தின் ஆதாரம் குறித்து வெளிப்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சி.பி.ஐ இயக்குநர்களின் நியமனம் குறித்த ஆவணங்களை பகிரங்கப்படுத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தகவல் உரிமை கமிஷனின் வரம்பிலிருந்து சி.பி.ஐக்கு கடந்த ஜூன் மாதம் 9-ஆம் தேதி முதல் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்ற வாதத்தை தகவல் உரிமை கமிஷன் நிராகரித்துவிட்டது. முந்தைய அதிகாரத்தில் சி.பி.ஐக்கு விலக்கு அளிக்கவில்லை என தகவல் உரிமை கமிஷனர் ஷைலேஷ் காந்தி தெரிவித்துள்ளார்.

தகவல் உரிமை கமிஷன் ஆர்வலர் எஸ்.எஸ்.ராணாவத் அளித்த மனுவில் கமிஷன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4-ஆம் தேதி சி.பி.ஐ அதிகாரிகள் சொத்து விபரத்தை வெளியிட வேண்டும் என கோரி ராணாவத் மனு அளித்திருந்தார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza