Monday, July 4, 2011

ஹரீரி கொலை:குற்றத்தை நிராகரித்தது ஹிஸ்புல்லாஹ்

55891601-lebanons-hezbollah
பெய்ரூத்:லெபனானின் முன்னாள் பிரதமர் ரஃபீக் அல் ஹரீரி கொலைவழக்கில் தங்களின் நான்கு உறுப்பினர்கள் மீது குற்றம் சுமத்தியுள்ளதை ஹிஸ்புல்லாஹ்வின் தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ் நிராகரித்துவிட்டார். ஐ.நா ஆதரவு பெற்ற தீர்ப்பாயம் வெளியிட்ட கைது வாரண்டையும் நிராகரித்த நஸ்ருல்லாஹ் தங்களின் உறுப்பினர்களை ஒரு சக்தியாலும் கைது செய்ய முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.

ஹிஸ்புல்லாஹ் உறுப்பினர்கள் மீது குற்றம் சுமத்தி ஐ.நா ஆதரவு பெற்ற தீர்ப்பாயம் அறிக்கை வெளியிட்ட பிறகு முதன் முதலாக நஸ்ருல்லாஹ் இதற்கு பதிலளித்துள்ளார். விசாரணை கமிஷன் அநீதமாக செயல்படுவதாகவும் இவர்களுக்கு நிதியுதவி அளிப்பதை அரசு நிறுத்தவேண்டும் எனவும் முன்னர் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை விடுத்திருந்தது.

ஹிஸ்புல்லாஹ்விற்கு எதிராக தீர்ப்பாயம் கூறிய அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரித்த நஸ்ருல்லாஹ், இது இயக்கத்தின் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்ற நோக்கமாகும் என தெரிவித்தார். ஹரீரி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஹிஸ்புல்லாஹ் உறுப்பினர்கள் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை தடுப்பதில் மகத்தான வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள் ஆவர்.

அவர்களை கண்டுபிடிக்கவோ, கைது செய்யவோ தீர்ப்பாயத்திற்கு 30 தினங்கள் அல்ல 300 வருடங்கள் கழிந்தாலும் இயலாது என நஸ்ருல்லாஹ் தெரிவித்தார். தீர்ப்பாயம் இஸ்ரேலின் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகும். இது நேர்மையற்றதும், ஊழலில் திளைத்ததுமாகும் என அவர் குற்றம் சாட்டினார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza