Monday, July 4, 2011

தாய்லாந்து:எதிர்கட்சிக்கு வெற்றி

Yingluck_Shinawatra_001
பாங்காக்:தாய்லாந்து நாட்டில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பொதுத்தேர்தலில் பியூதாய் கட்சி வெற்றிப்பெற்றுள்ளது. 92 சதவீத வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட பொழுது பியூதாய் கட்சி மொத்தமுள்ள 500 இடங்களில் 260 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையை பெற்றுள்ளது. ஆளுங்கட்சியான டெமோக்ரேடிக் கட்சிக்கு 160 இடங்களே கிடைத்துள்ளன.

இதனால் தாய்லாந்தின் முதல் பெண் பிரதமராக பியூதாய் கட்சியின் தலைவர் யிங்லக் ஷினவத்ரா பதவியேற்கவுள்ளார். கடந்த 2006-ஆம் ஆண்டு நாடுகடத்தப்பட்ட கட்சியின் முன்னாள் தலைவர் தக்ஸின் ஷினவத்ராவின் சகோதரிதான் 44 வயதான யிங்லக்.

புதிய அரசு பதவியேற்பதை தொடர்ந்து தாய்லாந்தில் வருடக்கணக்காக நிலவும் அரசியல் மோதல்கள் தணியும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு டெமோக்ரேடிக் கட்சிக்கும், பியூ தாய் கட்சிக்கும் இடையே நடந்த மோதலில் 90 பேர் கொல்லப்பட்டனர்.

’இந்த வெற்றி என்னுடையதோ, கட்சியுடையதோ அல்ல. மக்கள் அளித்துள்ள வாய்ப்பாகத்தான் இதனை பார்க்கிறேன். அவர்களுக்காக பெரும்பாலும் பாடுபடுவேன்.’- பாங்காக் கட்சி தலைமையகத்தில் வைத்து பத்திரிகையாளர்களிடம் யிங்லக் தெரிவித்தார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza