ஜுபா:பல ஆண்டுகளாக தொடரும் இரத்தக்களரியை ஏற்படுத்திய மோதல்களின் இறுதியில் தெற்கு சூடான் என்ற நாடு உருவாகியுள்ளது. தெற்கு சூடானின் தலைநகரான ஜுபாவில் இன்று சுதந்திர பிரகடன நிகழ்ச்சி நடைபெறும். இந்நிகழ்ச்சியில் இந்தியாவின் துணை குடியரசு தலைவர் ஹமீத் அன்ஸாரி பங்கேற்பார்.கார்த்தூமை தலைநகராக கொண்டு விளங்கிய சூடானின் கட்டுப்பாட்டிலிருந்து விலகும் நாடான தெற்கு சூடானின் அதிகாரப்பூர்வ சுதந்திர பிரகடனம் சபாநாயகர் ஜேம்ஸ் வானி இங்கிலாந்தில் நிறைவேற்றுவார். தெற்கு சூடான் அதிபர் ஸால்வே கிர் மயார்தித் அளிக்கும் விருந்தில் ஹமீத் அன்ஸாரி கலந்துக்கொள்கிறார். உலகில் 193-வது நாடாக தெற்கு சூடான் உதயமாகும்.
சூடானிலிருந்து தெற்கு பிரதேசத்தை தனியாக பிரிக்க வேண்டுமா என இவ்வருடம் துவக்கத்தில் நடந்த மக்கள் விருப்ப வாக்கெடுப்பில் தெற்கு சூடானில் பெரும்பாலான மக்கள் பிரிவினைக்கு ஆதரவாக வாக்களித்தனர். உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவந்து 2005-ஆம் ஆண்டு உருவாக்கிய அமைதி ஒப்பந்தத்தில் முக்கிய பிரிவுதான் மக்கள் விருப்ப வாக்கெடுப்பு நடத்துவதற்கான தீர்மானம்.
சுதந்திர நாடாக மாற தெற்கு சூடான் தீர்மானித்தால் அதனை நடைமுறைப்படுத்துவோம் என சூடான் அதிபர் உமருல் பஷீர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். ஆப்பிரிக்காவில் மிகப்பெரிய நாடான சூடானில் 22 வருடங்களாக நடைபெறும் இனக்கலவரத்திற்கு பொருளாதாரமு, ஆட்களையும் அளித்து உதவுவது அமெரிக்காவும் இஸ்ரேலுமாகும்.

0 கருத்துரைகள்:
Post a Comment