லண்டன்:பொருளாதார நெருக்கடியின் காரணமாக ஐரோப்பாவில் தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக சுகாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்கா மற்றும் பிரிட்டனை சார்ந்த சுகாதார வல்லுநர்கள் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
2007 ஆம் ஆண்டு முதல் 2009 வரை 10 ஐரோப்பிய நாடுகளில் நடத்திய பரிசோதனையில் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரியவந்தது ஒரு நாட்டைத்தவிர இதர ஒன்பது நாடுகளில் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரியவந்ததாக வல்லுநர் குழு கூறுகிறது.
ஐந்து சதவீதம் முதல் 17 சதவீதம் வரையில் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்கொலை சதவீதத்தை குறைப்பதற்கு நலத்திட்டங்களில் அதிகமான முதலீடு செய்ய வேண்டும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். பொருளாதார நெருக்கடி காரணமாக இக்காலக்கட்டத்தில் வேலையில்லா திண்டாட்டம் பெருமளவில் அதிகரித்தது.
ஆஸ்திரியாவில் மட்டுமே தற்கொலை எண்ணிக்கை குறைவாக காணப்படுகிறது ஆஸ்திரியாவில் இதர ஐரோப்பிய நாடுகளைப் போல பொருளாதார நெருக்கடி பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

0 கருத்துரைகள்:
Post a Comment