பெங்களூர்:சட்டவிரோத சுரங்கத்தொழில் வழக்கில் சிக்கிய கர்நாடகா மாநில பா.ஜ.க முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவிற்கு எதிராக லோகாயுக்தா முதன்மை செயலாளர் எஸ்.வி.ரங்கநாத்திடம் அறிக்கையை சமர்ப்பித்தது. 6000 பக்கங்களைக் கொண்ட லோகா யுக்தா அறிக்கையில் சட்ட விரோத சுரங்கத் தொழிலில் எடியூரப்பாவின் பங்கு தெளிவாக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத சுரங்கத்தொழில் தொடர்பாக லோகாயுக்தாவின் அறிக்கையை 2006-ஆம் ஆண்டே சமர்ப்பிக்க வேண்டுமென அரசு கோரிக்கை விடுத்திருந்தது என நீதிபதி சந்தோஷ்ஹெக்டே தெரிவித்துள்ளார். ’பெல்லாரி, சித்ரதுர்கா, தும்கூர் ஆகிய இடங்களில் சட்டவிரோத சுரங்கத்தொழில் நடத்துவதாக அறிக்கை கிடைத்துள்ளது. நாங்கள் இவ்விடங்களிலிருந்து பெருமளவில் இரும்புத்தாதை கைப்பற்றியிருந்தோம். ஆனால் பின்னர் இது எங்கள் வசம் இருந்து பறிபோய்விட்டது’ நீதிபதி ஹெக்டே கூறுகிறார்.
சட்ட விரோத சுரங்கத்தொழில் நடத்தும் நிறுவனங்களிடமிருந்து பெருமளவில் எடியூரப்பாவும், குடும்ப உறுப்பினர்களும் லஞ்சம் வாங்குவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் தங்களுடைய நிலத்தை சுரங்கத்தொழில் நிறுவனங்களுக்காக இவர் 20 கோடிக்கு விற்பனை செய்துள்ளார். ஊழல் தடுப்பு சட்டத்தின் அடிப்படையில் எடியூரப்பாவை விசாரிக்க ஹெக்டே அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளார். ரெட்டி சகோதரர்களும் அரசு கருவூலத்திற்கு ஏற்பட்ட இழப்பை திரும்ப செலுத்த வேண்டிவரும் என கருதப்படுகிறது.
முன்னாள் கர்நாடகா மாநில முதல்வர் ஹெச்.டி.குமாரசுவாமி, காங்கிரஸ் எம்.பி.அனில் லாட் ஆகியோரும் இவ்வழக்கில் லோகாயுக்தா விமர்சித்துள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment