இஸ்லாமாபாத்:அமெரிக்கா பாகிஸ்தானுக்கு அளித்துவந்த ராணுவ உதவியை குறைத்துக்கொண்டது போராளிகளுக்கு எதிரான நடவடிக்கையை பாதிக்காது என அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்கா அளித்துவரும் ராணுவ உதவித்தொகையில் 80 கோடி டாலரை வெட்டிக்குறைத்ததாக நேற்று முன்தினம் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால் உதவியை குறைத்தது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்கவில்லை என பாகிஸ்தானின் ராணுவ செய்தி தொடர்பாளர் ஜெனரல் அத்ஹா அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
குறைக்கப்பட்ட தொகை அமெரிக்கா பாகிஸ்தானுக்கு அளிக்கும் மொத்த உதவித்தொகையில் மூன்றில் ஒரு பகுதியாகும். பாகிஸ்தான் எங்களது நட்பு நாடு என்றாலும் உறவை நிலைநாட்டுவதில் அதிக சிரமங்கள் இருப்பதாக நேற்று முன்தினம் அமெரிக்கா தெரிவித்திருந்தது. பாகிஸ்தானின் சில நடவடிக்கைகள் தாம் ராணுவ உதவியை குறைப்பதற்கு காரணம் என வெள்ளை மாளிகையின் சீஃப் ஆஃப் ஸ்டாஃப் பில் டாலி எ.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:
Post a Comment