Tuesday, July 12, 2011

வஸ்தன்வி:இம்மாதம் இறுதி முடிவு

Darul-uloom-deoband
முஸாஃபர் நகர்:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திரமோடிக்கு ஆதரவாக பேட்டியளித்தார் என குற்றம் சாட்டப்பட்ட இந்தியாவின் புகழ்பெற்ற இஸ்லாமிய கல்வி கலாச்சாலையான தாருல் உலூம் தேவ்பந்தின் தலைவர் குலாம் முஹம்மது வஸ்தன்வியை பதவியிலிருந்து நீக்குவது தொடர்பான இறுதி முடிவு இம்மாதம் எடுக்கப்படும் என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட மூன்று உறுப்பினர்களை கொண்ட குழுவின் அறிக்கை இம்மாதம் 23,24 தேதிகளில் நடைபெறும் தாருல் உலூம் கவர்னிங் கவுன்சிலில் விவாதிக்கப்படும் என தற்காலிக துணைவேந்தர் மெளலானா அப்துல் காஸிம் நுஃமானி தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் மோடியின் தலைமையிலான அரசின் கீழ் முஸ்லிம்கள் வளர்ச்சி அடைந்துக்கொண்டிருப்பதாகவும், குஜராத்தில் முஸ்லிம்கள் மதத்தின் பெயரால் பாரபட்சத்தை சந்திக்கவில்லை எனவும் வஸ்தன்வி கூறியதாக சர்ச்சை கிளம்பியது. இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மோடி சரியான முறையில் புனர்வாழ்வுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளார் என வஸ்தன்வி ஓர் ஆங்கில பத்திரிகைக்கு பேட்டியளித்திருந்தார். இதனை வஸ்தன்வி மறுத்தார்.

வஸ்தன்வியின் அறிக்கையை முஸ்லிம் அமைப்புகளும், தாருல் உலூம் மாணவர்களும் கடுமையாக எதிர்த்ததை தொடர்ந்து துணைவேந்தர் பதவியிலிருந்து வஸ்தன்வியை தற்காலிகமாக முடக்கிவிட்டு குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய குழு நியமிக்கப்பட்டது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza