புதுடெல்லி:2ஜி லைசன்ஸ் சட்டங்களை மீறி ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்திற்கு அபராதத்தை குறைத்து அந்நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்பட்டார் எனக் குற்றம் சாட்டி செண்டர் ஃபார் பப்ளிக் இண்டரஸ்ட் லிட்டிகேஷன் என்ற தன்னார்வதொண்டு நிறுவனம் அளித்த பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடிச்செய்தது.
“தொலைத்தொடர்புத் துறையை சம்மந்தப்படுத்தி கூறப்படும் அனைத்து புகார்களையும் 2-ஜி அலைக்கற்றை ஊழலாகக் கருத முடியாது. கபில்சிபலுக்கு எதிராகக் கூறப்பட்டுள்ள இப்புகார் குறித்து இந்த நீதிமன்றம் உத்தரவு போடும் அவசியம் எழவில்லை. இதை விசாரிக்க வேண்டுமென்று சி.பி.ஐ. கருதினால் அதன் அதிகாரிகளே விசாரிக்கலாம்’ என்று நீதிபதிகளான ஜி.எஸ்.சிங்வி, எ.கே.கங்கூலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கூறியது. அரசுக்காக சோலிசிட்டர் ஜெனரலுக்கு பதிலாக வழக்கறிஞர் ரோஹிந்தன் நரிமான் ஆஜரானார்.
“ஒருங்கிணைந்த தொலைதொடர்பு உரிம ஒப்பந்தத்தை மீறியது தொடர்பாக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட ரூ. 650 கோடி அபராதத்தை ரூ. 5 கோடியாகக் கபில்சிபல் குறைத்ததாக’ பொதுநல மனுவில் கூறப்பட்டிருந்தது.
அதே வேளையில் சி.பி.ஐ தேவை என்ற வாதத்தை செண்டர் ஃபார் பப்ளிக் இண்டரஸ்ட் லிட்டிகேஷனுக்காக ஆஜரான பிரசாந்த் பூஷண் தொடர்ந்து எடுத்துவைத்தார். இதற்கிடையே ரோஹிந்தன் நரிமானை தனக்கு பதிலாக 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை நடத்துவதற்கு பொறுப்பை ஒப்படைத்த மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து ராஜினாமா கடிதம் அளித்த சோலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம் நீதிமன்றத்தில் நேற்றும் ஆஜராகவில்லை. தான் ஆஜரகமாட்டேன் என்ற குறிப்பை அவர் உச்சநீதிமன்றத்தில் அளித்திருந்தார்.

0 கருத்துரைகள்:
Post a Comment