Saturday, July 30, 2011

கர்நாடகா:பெல்லாரி சுரங்கங்களை மூட உச்ச நீதிமன்றம் உத்தரவு

 
BELLARY_MINING_737342eபுதுடெல்லி:கர்நாடக மாநிலத்தின் பெல்லாரியிலுள்ள இரும்புச் சுரங்கங்கள் அனைத்தையும் தற்காலிகமாக மூடுவதற்கு உச்சநீதிமன்றம் நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, பெல்லாரியில் 10,868 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இரும்புச் சுரங்கங்களுக்கு தடை விதித்தது.

பெல்லாரியிலுள்ள சுரங்கங்கள் தொடர்பாக ஆய்வு செய்து இடைக்கால அறிக்கை ஒன்றை தாக்கல் செய்யுமாறு, சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.கபாடியா உத்தரவிட்டார்.


பெல்லாரி மாவட்டத்தில் 148 இரும்பு தாது சுரங்கங்கள் உள்ளன. இவற்றில் மாநில வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் 98 சுரங்கங்கள் இருக்கின்றன. மற்றவை தனியாருக்கு சொந்தமானவை.

இந்தச் சுரங்கங்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக கூறி, உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மேற்குறிப்பிட்ட உத்தரவைப் பிறப்பித்தது.

“பெல்லாரியில் உள்ள சுரங்கங்கள் சுற்றுச் சூழலை பெரிதும் பாதிக்கிறது. சிலரது பேராசை, பலருக்கு இடையூறாக இருக்கிறது.

இந்தச் சுரங்கங்களில் பல கோடிக்கு ஊழல் நடந்து இருப்பதும் தெரிய வந்து இருக்கிறது. எனவே, அடுத்த உத்தரவு வரும் வரை, பெல்லாரியில் உள்ள அனைத்து சுரங்கங்களையும் மூட வேண்டும்.” என்று நீதிபதி நீதிபதி எஸ்.எஸ்.கபாடியா தலைமையிலான பெஞ்ச் உத்தரவிட்டது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza