லாகூர்:தனது தோற்றத்தின் மீது அதிக அளவில் கவனம் செலுத்திய இந்திய ஊடகங்கள் மீது பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஹினா ரப்பானி கர் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
இந்தியப் பயணம் மேற்கொண்ட பாகிஸ்தானின் முதல் பெண் வெளியுறவு அமைச்சரான ஹினா ரப்பானி, டெல்லியில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் இரு தரப்பு விவகாரங்கள் குறித்து பேச்சு நடத்தினார்.
ஹினா ரப்பானி குறித்த செய்திகளை வெளியிட்ட இந்தியாவின் முன்னணி நாளிதழ்கள் பலவும் அவரது தோற்றம், அவர் உடை மற்றும் ஆபரணம் உள்ளிட்ட ஃபேஷன் விஷயங்கள் குறித்து முக்கியத்துவம் அளித்து செய்து வெளியிட்டன.
இந்த நிலையில், லாகூருக்கு திரும்பிய அவரிடம் இந்தியாவின் பெரும்பாலான ஊடகங்களின் இத்தகைய கவரேஜ் குறித்து நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு கோபத்துடன் பதிலளித்த அமைச்சர் ஹினா, “எல்லா இடங்களிலும் ‘பபாரஸ்ஸி’யை பார்க்கலாம். நீங்கள் (ஊடகங்கள்) அப்படி நடந்து கொள்ளக் கூடாது,” என்றார்.
மேலும், அதுதொடர்பான அடுத்தடுத்த கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
0 கருத்துரைகள்:
Post a Comment