கெய்ரோ:எகிப்தின் ஆயா மெதானி ஆஃப்ரிக்கன் பெண்டாத்லான் விளையாட்டில் பெண்களுக்கான போட்டியில் தங்கம் வென்றார். இப்போட்டிகள் எகிப்தின் அலெக்ஸான்ட்ரியா நகரில் நடந்து வருகின்றது. இதன் மூலம் இலண்டனில் நடைபெறப்போகும் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்கு தகுதி அடைகிறார் ஆயா.
இதே போன்று ஆண்களுக்கான போட்டியில் எகிப்தின் யாஸர் ஹனஃபி தங்கத்தை வென்றார். இதன் மூலம் இவரும் இலண்டனில் நடைபெறப் போகும் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்கு தகுதி அடைகிறார்.
மெதானி 2008ல் பீஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக்கிலும் கலந்து கொண்டார்.
0 கருத்துரைகள்:
Post a Comment