Monday, July 25, 2011

பெல்ஜியத்தில் முகத்திரைக்கு தடை அமுலுக்கு வந்தது

belgium-niqabப்ரஸ்ஸல்ஸ்:ஐரோப்பிய நாடுகளை வாட்டிவரும் இஸ்லாமியஃபோபியா பிரான்சை அடுத்து பெல்ஜியத்தையும் பாதிப்படையச் செய்துள்ளது. இதன் விளைவு அந்நாட்டில் முஸ்லிம் பெண்கள் தங்களது கண்ணியத்தை பாதுகாப்பதற்காக அணியும் முகத்திரைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடை கடந்த சனிக்கிழமை அமுலுக்கு வந்தது.

இத்தடை மத சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான சவால் எனக்கூறி இந்த உத்தரவிற்கு எதிராக இரண்டு பெண்கள் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.


பொது இடங்களில் முகத்தை மறைப்பதற்கு எதிரான சட்டத்தை கடந்த மாதம் பெல்ஜியம் பாராளுமன்றம் ஏகமனதாக நிறைவேற்றியது. சட்டத்தை மீறுபவர்களுக்கு 197 டாலர் அபராதமும், ஏழு தினங்கள் சிறைத் தண்டனையும் வழங்கப்படும்.

பெல்ஜியத்தைச் சார்ந்த முஸ்லிம் பெண்கள் அந்நாட்டின் முகத்திரைக்கு எதிரான தடையை உதாசீனப்படுத்துவோம் என துணிச்சலாக அறிவித்துள்ளனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza