Sunday, July 31, 2011

ஜெ.வின் அரசியல் விளையாட்டு துவக்கம்: தி.மு.க தலைவர்கள் கைது

 
2005060705390101சேலம்:தமிழகத்தில் வீசிய முந்தைய தி.மு.க அரசு மீதான கடுமையான அதிருப்தி அலையில் ஆட்சியை பிடித்தது செல்வி ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க அரசு. இதனைத் தொடர்ந்து முந்தைய தி.மு.க அரசின் பல்வேறு திட்டங்களையும் முடக்கிய ஜெ.அனைத்து தரப்பு மக்களாலும் பாராட்டப்பெற்ற சமச்சீர் கல்வித் திட்டத்தை முடக்கிவைத்து  கடந்த 2 மாத காலமாக மாணவர்களின் படிப்பை வீணாக்கிவருகிறார். மக்களுக்கு நலத்திட்டங்களை அறிவித்து அவர்களது நல்வாழ்வுக்குரிய பணிகளை ஆற்றாமல் இலவசங்களை குறித்த அறிவுப்புகளை தொடர்ந்து அரசிய எதிரியான தி.மு.க தலைவர்களை கைதுச் செய்யும் படலத்தை துவக்கியுள்ளார்.

கடந்தமுறை முதல்வர் பதவியில் இருக்கும் வேளையில் முன்னாள் முதல்வரும், தி.மு.க தலைவருமான மு.கருணாநிதியை நள்ளிரவில் கைதுச்செய்து நாடுமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போதும் தனது அரசியல் சித்து விளையாட்டை துவக்கியுள்ளார் ஜெயலலிதா. இதற்காக சிறப்பு போலீஸ் பிரிவுகளை உருவாக்கியுள்ளார் அவர்.


முன்னாள் அமைச்சர் வீரப்பாண்டி ஆறுமுகம், ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ ஆகியோரை போலீசார் நேற்று கைதுச் செய்தனர். பல்வேறு பிரிவுகளில் இவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. முன்னர் பதிவுச் செய்த இரண்டு வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் மூலமாக முன் ஜாமீன் பெற்ற வீரப்பாண்டி ஆறுமுகம் நேற்று சேலத்திற்கு வந்தவுடன் புதிய நில அபகரிப்பு வழக்கில் நகர க்ரைம் ப்ராஞ்ச் போலீசார் கைதுச் செய்தனர். இதனை சேலம் நகர போலீஸ் கமிஷனர் சொக்கலிங்கம் அறிவித்துள்ளார்.

அதேவேளையில், வீரப்பாண்டி ஆறுமுகத்தின் கைதுக்கு எதிராக மாவட்ட தி.மு.க தலைமை நடத்திய போராட்டத்தில் கல்வீச்சு நடந்தது. எட்டு இடங்களில் நடந்த கல்வீச்சில் இரண்டு வாகன ஓட்டுநர்கள் கைதுச் செய்யப்பட்டனர்.மோதல் சூழலை கவனத்தில் கொண்டு மாவட்டம் முழுவதும் ஆயுத போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

தென் சென்னை தி.மு.க மாவட்ட செயலாளரான அன்பழகனை திருப்பூரில் அவருடைய வீட்டில் வைத்து அதிகாலையில் சென்னையில் இருந்து சென்ற போலீஸ் கைதுச் செய்தது. அன்பழகனின் கைதை கண்டித்து அவரை அடைத்துள்ள கோயம்புத்தூர் சிறைக்கு முன்பாக தி.மு.க தொண்டர்கள் திரண்டனர். கட்சி தொண்டர்கள் மீது ஜெயலலிதா பொய்வழக்கை சுமத்துவதாக தி.மு.க தலைவர் மு.கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார். தலைவர்களை சட்டவிரோதமாக கைதுச் செய்ததற்கு எதிராக இன்று கண்டன தினம் கடைப்பிடிப்பதாக அவர் அறிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, அழகிரியின் நெருங்கிய ஆதரவாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் மீது நில அபகரிப்பு வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே திருவாரூர் மாவட்ட செயலாளர் கலைவாணனை ஒரு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த அழைத்துச்சென்ற போலீஸ் நடவடிக்கையை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க எம்.எல்.ஏவும், மு.கருணாநிதியின் மகனுமான மு.க.ஸ்டாலினை போலீஸார் கைதுச் செய்தனர். ஸ்டாலின் கைதை கண்டித்து போராட்டம் நடத்திய 150க்கும் மேற்பட்ட தி.மு.க தொண்டர்களையும் போலீசார் கைதுச் செய்தனர். பின்னர் ஸ்டாலின் விடுதலைச் செய்யப்பட்டார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza