Sunday, July 31, 2011

சுப்ரமணீய சுவாமியின் சர்ச்சைக்குரிய கட்டுரை: இறுதி முடிவு செவ்வாய்க்கிழமை – சிறுபான்மை கமிஷன்

 
headerபுதுடெல்லி:முஸ்லிம்களின் வாக்குரிமையை பறிக்கவேண்டும் உள்ளிட்ட மிக கடுமையான வகுப்புவாத வெறித்தனத்துடன் அரசியல் கோமாளியும், தற்போதைய வலதுசாரி ஹிந்துத்துவா பயங்கரவாத கும்பலின் பிரச்சாரகருமான சுப்ரமணிய சுவாமி எழுதிய கட்டுரை தொடர்பாக வருகிற செவ்வாய்க்கிழமை இறுதி பரிசோதனை நடத்தப்படும் என தேசிய சிறுபான்மை கமிஷனின் தலைவர் வஜாஹத் ஹபீபுல்லாஹ் தெரிவித்துள்ளார்.

இம்மாதம் 19-ஆம் தேதி கூடிய கமிஷனின் கூட்டத்தில் சுப்ரமணிய சுவாமியின் கட்டுரைக் குறித்து ஆய்வுச் செய்யப்பட்டது. இதுக் குறித்து வஜாஹத் ஹபீபுல்லாஹ் கூறியதாவது:


வருகிற செவ்வாய்க்கிழமை கமிஷனின் அனைத்து உறுப்பினர்களும் கலந்துக்கொள்ளும் கூட்டத்தில் இக்கட்டுரைக் குறித்து எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து தீர்மானம் எடுக்கப்படும். கட்டுரை உணர்ச்சியை தூண்டக் கூடியதும், சட்டவிரோதமானதுமாகும். இதனை கமிஷன் கண்டறிந்துள்ளது. இதுத்தொடர்பாக சட்ட ஆலோசனை பெறுவதற்கான காரியங்களை கூட்டம் தீர்மானிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

மும்பையில் இம்மாதம் நடந்த தொடர்குண்டுவெடிப்புகள் நிகழ்ந்து 3-வது நாள் மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டி.என்.எ பத்திரிகையில் எழுதிய கட்டுரையில்தான் சுப்ரமணிய சுவாமி சர்ச்சைக்குரிய விமர்சனங்களை வெளியிட்டிருந்தார்.

ஹிந்து பாரம்பரியத்தை அங்கீகரிக்காத முஸ்லிம்களின் வாக்குரிமையை பறிக்கவேண்டும் என்பது உள்பட வகுப்புவெறித்தனமான கருத்துக்கள் அவருடைய கட்டுரையில் அடங்கியிருந்தன.

சுப்ரமணிய சுவாமி உடனான அனைத்துவிதமான தொடர்புகளையும் முறிக்கவேண்டும் என கோரி ஹாவர்ட் பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகிகளுக்கு நேற்று முன்தினம் புகார் அளித்திருந்தனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza