பனாஜி:இஸ்ரேலை சார்ந்த போதை பொருள் வியாபாரியான பெனெயிம் என்ற அதாலாவை இந்தியாவிடம் ஒப்படைக்க சி.பி.ஐ இண்டர்போலின் உதவியை நாடியுள்ளது. பெனெயிம் தற்போது பெருநாட்டின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கோவாவில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக போலீஸ் இவரை விசாரித்து வருகிறது. அதாலா இந்தியாவுக்கு கிடைக்க சிரமம் ஏற்படாது என சி.பி.ஐயின் துணை இயக்குநர் ரிஷிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
போலீசாருக்கும், போதை பொருள் வியாபாரிகளுக்குமிடையேயான தொடர்பு குறித்து இரண்டு வழக்குகளை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சி.பி.ஐ விசாரணை நடத்திவருகிறது. இவ்வழக்குகளை முன்பு க்ரைம்ப்ராஞ்ச் விசாரித்த போதிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை.
குற்றவாளிகளை ஒப்படைப்பது தொடர்பான ஒப்பந்தம் இந்தியாவுக்கும்-பெருவுக்கும் இடையே இல்லை என்றாலும் அதாலாவை ஒப்படைக்க பெருவை அணுக இயலும் என சிங் தெரிவித்தார். குற்றவாளிகளை ஒப்படைப்பது குறித்த ஒப்பந்த இல்லை என்றாலும் அதற்கு சமமான ஒப்பந்த பத்திரத்தில் சில நாடுகளும் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கோவா போலீஸ் கிடங்கில் அதாலா போதைப்பொருள் விற்பனை நடத்திய வழக்கும், போதைப்பொருள் வியாபாரி டேவிட் திரிஹம் சம்பந்தப்பட்ட மற்றொரு வழக்கும் சி.பி.ஐ விசாரிக்கிறது. இந்த இரண்டு வழக்குகள் தொடர்பான ஆவணங்களை கோவா போலீஸிடமிருந்து சி.பி.ஐ சேகரித்துவருகிறது. க்ரைம்ப்ராஞ்ச் சமர்ப்பித்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய வேண்டும் எனவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சிங் தெரிவித்தார்.
போதை பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய ஏழு போலீஸ்காரர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்று வழக்குகளில் புதிய எஃப்.ஐ.ஆரை பதிவு செய்யப்போவதாகவும், அரசியல்வாதிகள் உள்பட குற்றவாளிகள் யார் என்பதை கண்டறிந்தால் சும்மா விடமாட்டோம் என ரிஷிராஜ் சிங் தெரிவித்தார்.
கோவா உள்துறை அமைச்சர் ரவிநாயக்கின் மகன் ராய்க்கு, அதாலா குற்றவாளியான வழக்கில் தொடர்பிருப்பதாக அதாலாவின் முன்னாள் காதலி லக்கி பாம்ஹவுஸ் குற்றம்சாட்டியிருந்தார்.

0 கருத்துரைகள்:
Post a Comment