Sunday, July 10, 2011

மலேசியாவில் அரசு எதிர்ப்பு பேரணிக்கு அழைப்பு:ஏராளமானோர் கைது

3337304945_8c18f5956e
கோலாலம்பூர்:தடையை மீறி மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் பேரணி நடத்த முயன்ற 1600 பேரை போலீஸ் கைது செய்தது. தேர்தலை சீர்திருத்தம் கோரி எதிர்கட்சி ஆதரவுடன் பெர்ஸிஹ்  2.0 என சுயமாக பெயர் சூட்டிக்கொண்ட ஒரு குழு விடுத்த அழைப்பை ஏற்று பேரணியில் கலந்துக் கொள்ளவந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பேரணியில் பங்கேற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பெடரல் போலீஸ் வெளியிட்ட எச்சரிக்கை தெரிவிக்கிறது. வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் நகரத்தின் முக்கிய சாலைகள் மற்றும் போக்குவரத்தையும் அதிகாரிகள் தடை செய்திருந்தனர். அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தலுக்கு முன்னோடியாக நாட்டில் தேர்தல் சீர்திருத்தம் கொண்டுவர இதன் மூலம் பிரதமர் நஜீப் ரஸ்ஸாக்கிற்கு நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

ஏராளமானோரை போலீஸ் கைது செய்த பிறகும் கோலாலம்பூரின் பல பகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ஊர்வலமாக ஸ்போர்ட்ஸ் ஸ்டேடியத்திற்கு செல்வதாக பத்திரிகைகள் கூறுகின்றன. நகரத்தில் பேரணி நடத்த அழைப்பு விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து போலீஸ் 150 பேரை விசாரித்து வந்தது.

மேலும் 91 பேருக்கு தலைநகரில் தடையை ஏற்படுத்தியிருந்தது. முப்பது பேரை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவலில் வைத்திருந்தனர். துவக்கத்தில் பேரணியை வீதியில் நடத்த எதிர்ப்பாளர்கள் திட்டமிட்டனர். ஆனால், போலீஸின் எதிர்ப்பை தொடர்ந்து ஸ்போர்ட்ஸ் ஸ்டேடியத்திற்கு மாற்றினர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza