புதுடெல்லி:2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க தலைவர் மு.கருணாநிதியின் மகளும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி ஆகியோருக்கு ஜாமீன் அனுமதிக்க வேண்டும் என மூத்த பா.ஜ.க தலைவரும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான ஜஸ்வந்த் சிங் கூறியுள்ளார்.
கொலை குற்றம் போன்ற கடுமையான குற்றம் சாட்டப்படவில்லையெனில் அவர்கள் சிறையில் அடைக்கப்பட தேவையில்லை. விசாரணை நடக்கத்தான் செய்கிறது. ஒருவருக்கு நிரந்தரமாக ஜாமீன் மறுக்க முடியாது. ஜாமீன் என்பது குடிமக்களின் உரிமையாகும். இவ்வாறு கூறிய ஜஸ்வந்த் சிங் இது தனது தனிப்பட்ட கருத்து எனவும், பா.ஜ.கவின் கருத்து அல்ல எனவும் சி.என்.என்.-ஐ.பி.என் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்முகத்தில் தெரிவித்தார்.
0 கருத்துரைகள்:
Post a Comment