மதுரை:பொய்வழக்கை பதிவு செய்தல் மற்றும் மனித உரிமைகளை மீறியது தொடர்பாக மதுரை நகர கமிஷனர் பி.கண்ணப்பன் உள்பட 6 போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய தமிழ்நாடு உள்துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1997-ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் கண்ணப்பன் எஸ்.பியாக பணியாற்றிய பொழுது மனித உரிமை மீறல்களை நடத்தியுள்ளார். கண்ணப்பனை தவிர இன்ஸ்பெக்டர்களான மாதவன், பாஸ்கரன், சப் இன்ஸ்பெக்டர் தசரதராஜன், தலைமை கான்ஸ்டபிள்களான ராஜமணி, சாமிதுரை ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய மதுரை பெஞ்ச் உத்தரவிட்டிருந்தது.
போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிருஷ்ணமூர்த்தி என்பவர் நீதிமன்றத்தை அணுகினார். ஒரு இளம்பெண்ணை கொலை செய்ததாக குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கக்கோரி தன்னையும், தனது நண்பரான பழனியையும் போலீஸ் சித்திரவதை செய்ததாக கிருஷ்ணமூர்த்தி புகார் அளித்திருந்தார். கொலை செய்யப்பட்டதாக போலீஸ் கூறிய இளம்பெண் கடந்த 2002-ஆம் ஆண்டு உயிரோடு கண்டுபிடிக்கப்பட்டார்.
0 கருத்துரைகள்:
Post a Comment