மும்பை:மும்பை குண்டுவெடிப்பு வழக்கை சி.பி.ஐ வசம் ஒப்படைக்கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மும்பையில் நடந்தது நாட்டிற்கு எதிரான தாக்குதல் எனவும், ஆதலால் சி.பி.ஐ போன்ற தேசிய புலனாய்வு ஏஜன்சிகள் விசாரணையை மேற்கொள்ளவேண்டும் என வழக்கறிஞர் வி.பி.பாட்டீல் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
ரகசிய புலனாய்வுத்துறைக்கு ஏற்பட்ட வீழ்ச்சிக்கு மஹராஷ்ட்ரா அரசுக்கெதிராக நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். மாநில ரகசிய புலனாய்வுதுறையை வலுப்படுத்த கமிட்டியை உருவாக்கவேண்டும் இவ்வாறு அவர் தனது மனுவில் கோரியுள்ளார்.
தற்போது மும்பை குண்டுவெடிப்பு வழக்கை மஹாராஷ்ட்ரா மாநில தீவிரவாத தடுப்பு படையும்(ஏ.டி.எஸ்), மும்பை க்ரைம்ப்ராஞ்சும் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றன.

0 கருத்துரைகள்:
Post a Comment