மும்பை:மும்பை குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு துயர் துடைப்பு உதவிகளை உறுதிச்செய்ய மஹாராஷ்ட்ரா மாநில மனித உரிமை கமிஷன் தலையிடவேண்டும் என முன்னாள் எம்.பி கிரித் சோமய்யா மனு அளித்துள்ளார்.
2006 ரெயில் குண்டுவெடிப்பிலும், 2008 மும்பை தாக்குதலிலும் பாதிக்கப்பட்டவர்களின் அனுபவம் அண்மையில் நடந்த மும்பை குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படக்கூடாது என சோமய்யா தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். அரசின் மந்தகதியிலான உதவி திட்டங்கள் மீது கமிஷன் உத்தரவிடவேண்டும். 2006 ஆம் ஆண்டு நடந்த ரெயில் குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை உதவி கிடைக்கவில்லை.
2008 தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஸாபிரா கான் உதவிக்காக அரசின் வாயில்களை தட்டிக்கொண்டிருக்கிறார். இத்தாக்குதலில் கொல்லப்பட்ட போலீஸ்காரரின் மகனுக்கு அரசு வாக்களித்த பெட்ரோல் பம்ப் இதுவரை அனுமதிக்கவில்லை. இதற்காக அதிகாரிகள் 75 லட்சம் ரூபாய் கேட்டுள்ளனர். துயர்துடைப்பு உதவிகளை கண்காணிக்க ஓய்வு பெற்ற சட்ட அதிகாரி மற்றும் துயர்துடைப்பு செயலாளர் அடங்கிய குழுவை நியமிக்கவேண்டும் என சோமய்யா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இம்மனு மீதான விசாரணை அடுத்தவாரம் நடைபெறும் என சோமய்யா தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:
Post a Comment