பாட்னா:பீகார் மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான 4311 வழக்குகள் தீர்ப்பு அளிக்கப்படாமல் குவிந்து கிடப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
வழக்குகள் கவனத்தில் கொள்ளப்படாமல் ஆமை வேகத்தில் நகர்த்துவதுதான் இவ்வளவு வழக்குகள் தேங்கிக்கிடக்க காரணம் என அதிகாரப்பூர்வமாக கிடைக்கும் பதிலாகும்.
1989-ஆம் ஆண்டிலிருந்து துவங்கும் இவ்வழக்குகள் போலீஸ் ஸ்டேசனில் கோப்புகளில் தேங்கிக் கிடக்கின்றன. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தேசிய அட்டவணைப்படுத்தப்பட்ட ஜாதியினர், பழங்குடியினர் கமிஷன் தலைவர் புத்தசிங் பீகார் மாநிலத்திற்கு வருகைத்தந்தார். வழக்குகள் குவிந்துக்கிடப்பதை மிகவும் முக்கியத்துவத்துடன் பரிசீலிப்பதாக அவர் அப்பொழுது தெரிவித்தார்.
ஒவ்வொரு மாதமும் இவ்வகையான கிட்டத்தட்ட 200 வழக்குகள் பதிவுச் செய்யப்படுவதாக மாநில போலீஸ் கூடுதல் இயக்குநர் ஜெனரல் எ.எஸ்.நிம்ப்ரன் தெரிவித்துள்ளார். வழக்குகளில் விரைவாக தீர்ப்பு வழங்குவதற்காக 30 புதிய போலீஸ் நிலையங்களை துவக்க மாநில தீர்மானித்துள்ளது.
தலித் சமுதாயத்தின் வளமான வாழ்விற்காக 22 ஜாதிகளை உட்படுத்தி சிறப்பு திட்டத்தை பிரகடனப்படுத்த மகா தலித் கமிஷன் முன்னர் சிபாரிசு செய்திருந்தது.
0 கருத்துரைகள்:
Post a Comment