ஃபுல்பானி(ஒரிஸ்ஸா):2008-ஆம் ஆண்டு நிகழ்ந்த கண்டமால் கலவரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட 39 பேரை நீதிமன்றம் குற்றமற்றவர்கள் எனக்கூறி விடுதலைச் செய்துள்ளது. இவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை நிரூபிக்க போதிய ஆவணங்கள் இல்லை எனக்கூறி கூடுதல் செசன்ஸ் நீதிபதி எஸ்.கெ.தாஷ் விடுவிக்க உத்தரவிட்டார்.
கண்மாலில் நடந்த கிறிஸ்தவ சிறுபான்மை மக்களுக்கு எதிரான சங்க்பரிவார பயங்கரவாதிகள் நடத்திய கலவரத்தில் பல்வேறு வழக்குகளில் இவர்கள் கைதுச் செய்யப்பட்டனர். சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த மக்களின் வீடுகளை தீவைத்துக் கொளுத்தியதாக போலீசார் 29 பேரை கைதுச் செய்தனர். இதர 10 பேரை பல்வேறு வழக்குகளில் போலீஸ் கைதுச் செய்திருந்தது.
0 கருத்துரைகள்:
Post a Comment