லண்டன்:நார்வேயின் தலைநகர் ஓஸ்லோவில் 92 நபர்களை கூட்டுப்படுகொலை செய்த ஆண்டேர்ஸ் பெஹ்ரிங் ப்ரெவிக்கின் சியோனிஷ தொடர்பு வெளிவராமல் இருக்க ப்ரெவிக்கை வலதுசாரி பழமைவாதி என மேற்கத்திய ஊடகங்கள் சித்தரிப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இஸ்ரேலுடன் தொடர்புடைய கிறிஸ்தவ சியோனிஷ பயங்கரவாதிதான் ப்ரெவிக் என்பதில் கருத்துவேறுபாடு இல்லை எனவும், அவர் பல முறை இஸ்ரேலுக்கு சென்றுள்ளார் எனவும் பிரபல ஆய்வாளர் பீட்டர் ஐர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் காரணமாகத்தான் மேற்கத்திய ஊடகங்கள் ப்ரெவிக்கை வலதுசாரி பழமைவாதி என சித்தரித்தன.
சியோனிஸ்டுகளின் ஆதரவுடன் ப்ரெவிக் நடத்திய கூட்டுப் படுகொலைதான் ஜூலை-22 என அவர் கூறுகிறார். ஐரோப்பாவில் இஸ்லாத்தின் வளர்ச்சியில் வெறுப்படைந்த ப்ரெவிக் கடுமையான இஸ்லாமிய விரோதியாவார்.
இதற்கிடையே தொடர்ந்து ஓஸ்லோவில் குண்டுவெடிப்பை நடத்த ப்ரெவிக் திட்டமிட்டதை போலீஸ் விசாரணையின்போது அவன் தெரிவித்துள்ளான். மன்னரின் அரண்மனை, லேபர் கட்சியின் அலுவலக கட்டிடம், அரசு கட்டிடங்கள் ஆகியவற்றை குறிவைத்து குண்டுவெடிப்பை நிகழ்த்த ப்ரெவிக் திட்டமிட்டுள்ளான்.
0 கருத்துரைகள்:
Post a Comment