Sunday, July 31, 2011

தஹ்ரீர் சதுக்கத்தில் மீண்டும் மக்கள் வெள்ளம்

 
110218_tahrir_rally2_photoblog600கெய்ரோ:எகிப்தின் மக்கள் எழுச்சியின் மையமாக திகழும் கெய்ரோவின் தஹ்ரீர் சதுக்கத்தில் வெள்ளிக்கிழமை லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர்.

வெளியேற்றப்பட்ட முன்னாள் அதிபர் ஹுஸ்னி முபாரக்கின் விசாரணையை துரிதப்படுத்துதல், மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குதல், சிவிலியன்கள் மீதான விசாரணையை நிறுத்துதல், நாட்டில் உள்ள தொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட சம்பளத்தை உறுதிச்செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் தஹ்ரீர் சதுக்கத்தில் ஒன்று திரண்டனர்.


முபாரக்கின் விசாரணை அடுத்த வாரம் துவங்கவிருக்கவே, அனைத்து போராட்ட இயக்கங்களும் இணைந்து ‘யூனிட்டி மார்ச்’ நடத்தப்படும் என முன்னர் தகவல் வெளியானது. பேரணியை இஸ்லாமிய அமைப்புகள் கைவசப்படுத்தும் என குற்றம் சாட்டி ஒரு பிரிவு மதசார்பற்ற அமைப்புகள் இப்பேரணியை புறக்கணித்தன. ஆனால் ரெவியலூசன் யூத் கோஎலிசன் உள்ளிட்ட செக்குலர்-லிபரல் அமைப்புகள் பேரணியில் பங்கேற்றதாக அல்ஜஸீரா கூறுகிறது.

அதேவேளையில், நேற்று முன்தினம் ஸினாயில் கலவரம் நடத்தியவர்களை போலீஸார் கைதுச் செய்தனர். ஆயுதம் ஏந்தியவர்கள் சிலர் அப்பகுதியில் போலீஸ் நிலையத்தை கைப்பற்ற நடத்திய தாக்குதலில் போலீஸ் காரர் உள்பட ஆறுபேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் 20 பேருக்கு காயம் ஏற்பட்டது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza