முஸாஃபர்நகர்:தாங்கள் வெளியிடும் ஃபத்வாக்கள் (மார்க்க தீர்ப்புகள்) வலுக்கட்டாயமாக திணிக்கும் நோக்கில் வெளியிடப்படுதில்லை எனவும், அவை வழிகாட்டுதல் மட்டுமே எனவும் தாருல் உலூம் தேவ்பந்தின் ஃபத்வா பிரிவு தலைவர் முஃப்தி ஹபீபுர் ரஹ்மான் அறிவித்துள்ளார்.
ஃபத்வா (மார்க்கத் தீர்ப்பு) என்பது கட்டளையல்ல. எந்தவொரு நபரும் அதனை ஏற்றுக்கொள்ளவும், நிராகரிக்கவும் சுதந்திரம் உண்டு. குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை புகழ்ந்தது தொடர்பான சர்ச்சையை தொடர்ந்து தேவ்பந்தின் துணைவேந்தர் மெளலானா குலாம் முஹம்மது வஸ்தான்வியை பதவியிலிருந்து நீக்கியது ஜனநாயகரீதியிலான வாக்கெடுப்பு மூலமாகும்.
வஸ்தான்வி பதவியிலிருந்து விலக மறுத்ததை தொடர்ந்து நிர்வாக போர்டு தலையிட்டு இத்தகைய ரீதியில் அவரை நீக்கியது. இவ்வாறு ஹபீபுற்றஹ்மான் தெரிவித்தார்.
0 கருத்துரைகள்:
Post a Comment