மும்பை:மும்பையில் கடந்த ஜூலை 13-ஆம் தேதி நடந்த தொடர் குண்டுவெடிப்பின் பின்னணியில் செயல்பட்டது ஆறுபேர் அடங்கிய குழு என சந்தேகிப்பதாக மஹராஷ்ட்ரா தீவிரவாத தடுப்பு படை(ஏ.டி.எஸ்) தெரிவித்துள்ளது.
இவர்களுக்கு மேற்குவங்காளத்துடனும், குஜராத்துடனும் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.நேற்று முன்தினம் நடத்திய பாதுகாப்பு ஏஜன்சிகளின் கூட்டத்தில் மூன்று இடங்களிலும் குண்டை நிர்மாணித்ததன் பின்னணியில் இக்குழுவிற்கு தொடர்பிருப்பது குறித்து ஏகமனதான அபிப்ராயம் நிலவியதாக ஏ.டி.எஸ் அதிகாரி தெரிவித்தார்.
அதேவேளையில் மும்பை தொடர்குண்டுவெடிப்பில் ஜவேரி பஸாரில் காயமுற்று சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அசோக் பட்(வயது 45) என்பவர் நேற்று காலை மரணமடைந்தார். இத்துடன் மும்பை குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment