Wednesday, July 20, 2011

மலேகான்:முக்கிய குற்றவாளிகளை விசாரணை செய்ய என்.ஐ.ஏவுக்கு அனுமதி

malegaon
மும்பை:2008 மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளை விசாரணை செய்ய இம்மாதம் 22-ஆம் தேதி முதல் ஏழு நாட்களுக்கு கஸ்டடியில் எடுக்க தேசிய புலனாய்வு ஏஜன்சிக்கு(என்.ஐ.ஏ) சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. லெஃப்டினண்ட் கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித், சுதாகர் உதய்பான் திரிவேதி என்ற தயானந்த் பாண்டே, முன்னாள் மேஜர் ரமேஷ் உபாத்யாய ஆகியோரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

2008 செப்டம்பர் மாதம் ஆறுபேர் மரணத்திற்கு காரணமான குண்டுவெடிப்பில் புரோகித் உள்பட 11 பேரும் சதித்திட்டம் தீட்டியதாக முன்னர் இவ்வழக்கை விசாரணை செய்த தீவிரவாத எதிர்ப்பு படையின் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது. தனி ஹிந்து நாட்டிற்காக போராடும் அபினவ் பாரத் என்ற ஹிந்துத்துவ பயங்கரவாத அமைப்பின் தலைவன் தாம் புரோகித்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza