அஹ்மதாபாத்:சொஹ்ரபுதீன் போலி என்கவுண்டர் கொலை வழக்கின் சாட்சியான துளசிராம் பிரஜாபதியின் போலி என்கவுண்டர் கொலைவழக்கின் முக்கிய விபரங்கள் அடங்கிய கம்ப்யூட்டர்களை சி.ஐ.டி அலுவலகத்திலிருந்து சி.பி.ஐ கைப்பற்றியது.
முன்னர் இவ்வழக்கை விசாரணைச் செய்த ஐ.பி.எஸ் அதிகாரிகளான கீதா ஜொஹ்ரி மற்றும் அவரது தனி உதவியாளர் பயன்படுத்தியவையே இந்த கம்ப்யூட்டர்கள் என சி.பி.ஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தொலைபேசி உரையாடல்கள் உள்பட முக்கிய விபரங்கள் அடங்கிய சி.டியும் கைப்பற்றப்பட்டுள்ளது. பிரஜாபதி போலி என்கவுண்டர் கொலை வழக்கில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி சி.பி.ஐ வழக்கு பதிவுச்செய்தது. 2005-ஆம் ஆண்டு சொஹ்ரபுதீன் ஷேக்கையும் அவரது மனைவி கவ்ஸர் பீயையும் குஜராத் போலீஸ் கொலைச்செய்த வழக்கில் நேரடி சாட்சியான பிரஜாபதி 2006-ஆம் ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி பனஸ்காந்தா மாவட்டத்தில் வைத்து குஜராத் போலீஸாரால் அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்டார்.
0 கருத்துரைகள்:
Post a Comment