பெங்களூர்:கர்நாடகா மாநிலத்தில் சட்டவிரோத சுரங்கத் தொழில் தொடர்பாக அம்மாநில பா.ஜ.க முதல்வர் எடியூரப்பாவின் பங்கினைக் குறித்து விசாரணைச் செய்யும் லோகாயுக்தா அறிக்கை வரவிருக்கும் வேளையில் உயர்நீதிமன்றத்திலும் பா.ஜ.கவின் தென்னிந்திய நாயகனுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
நிலபேர ஊழல் வழக்கில் எடியூரப்பாவையும், அவரது குடும்பத்தினரையும் விசாரணைச் செய்ய அனுமதிக்கவேண்டும் என ஆளுநர் ஹெச்.ஆர்.பரத்வாஜின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது.
கீழ் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து எடியூரப்பாவின் மருமகன் ஸோஹன்குமார், அவரது மகன்களான பி.ஒய்.ராகவேந்திர எம்.பி, பி.ஒய்.விஜயேந்திரா, இவர்களின் கீழ் இயங்கும் தவளகிரி டெவலப்பேர்ஸ், அக்கா மகாதேவி ஆகியோர் சமர்ப்பித்த மனுவை தள்ளுபடிச்செய்த நீதிபதி கெ.என்.கேஷவ நாராயணன் இந்த உத்தரவை வெளியிட்டார்.
முதல்வரையும், அவருடைய குடும்பத்தினரையும் குற்ற விசாரணை செய்வதில் சட்டச்சிக்கல்கள் இல்லை எனவும், குற்ற விசாரணைச்செய்ய கோரும் மனு முற்றிலும் நியாயமானது எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார். முன்னர் முதல்வர் எடியூரப்பாவை குற்ற விசாரணைச்செய்ய கோரி வழக்கறிஞர்களான சிரஞ்சின் பாஷா, கெ.என்.பலராஜ் ஆகியோர் ஆளுநருக்கு மனு அளித்திருந்தனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment