Saturday, July 23, 2011

கர்நாடகா:லோகாயுக்தா அறிக்கையின் மீது உடனடியாக நடவடிக்கை – ஆளுநர் உறுதி

h_r_bharadwaj_governor630பெங்களூர்:சட்டவிரோத சுரங்கத் தொழில் தொடர்பாக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா உள்பட அமைச்சர்களுக்கு பங்கிருப்பதாக நிரூபிக்கும் லோகாயுக்தாவின் அறிக்கையின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆளுநர் உறுதியளித்துள்ளார்.

லோகாயுக்தா நீதிபதி என்.சந்தோஷ் ஹெக்டே சிபாரிசு செய்தால் அதன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் ஆளுநர் ஹெச்.ஆர்.பரத்வாஜ் உறுதியளித்தார்.
லோகாயுக்தாவின் அறிக்கை வருகிற திங்கள் கிழமை அரசுக்கு அளிக்கப்படும் என கருதப்படுகிறது.


சட்டவிரோத சுரங்க தொழில் தொடர்பான இறுதி அறிக்கையை லோகாயுக்தா தயாரித்து வருகிறது. இந்த அறிக்கையை தாக்கல் செய்யும் முன்பே அறிக்கையின் சில அம்சங்கள் வெளியாகின. சட்டவிரோத சுரங்க தொழில் முறைகேடு மூலம் கடந்த 14 மாதங்களில் மாநில அரசு கருவூலத்திற்கு ரூ.1800 கோடி இழப்பீடு ஏற்பட்டு இருப்பதாகவும், முதல்வர் எடியூரப்பாவிற்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இருப்பதாகவும் லோகாயுக்தாவின் தலைவர் சந்தோஷ் என்.ஹெக்டே தெரிவித்துள்ளார்.

இது குறித்து பெங்களூரில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட ஆளுநர் பரத்வாஜிடம் பத்திரிகையாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தார் பரத்வாஜ்.

அப்பொழுது அவர்,முதல்வர் எடியூரப்பா ராஜிநாமா செய்ய வேண்டுமா என்று கேட்கிறீர்கள். 2 நாள்கள் கழித்து வாருங்கள். அப்போது எல்லாம் தெரியும். ஆனால், எதையும் எதிர்பார்க்காதீர்கள்.

முதல்வர் எடியூரப்பா மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர். அறிக்கையை பார்க்கும் வரை அவரைப் பற்றி நான் கருத்துத் தெரிவிக்க முடியாது.

மாநில அரசு மற்றும் முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது. அறிக்கையில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை அறிந்த பிறகே என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை முடிவு செய்ய முடியும். சந்தோஷ் ஹெக்டேவின் அறிக்கை எனக்கு அனுப்ப்பட்டால் லோக் ஆயுக்த சட்டத்தின் பிரிவு 12,13-ன்படி தகுந்த நடவடிக்கை எடுப்பேன் என்றார் பரத்வாஜ்.

லோகாயுக்தா குற்றம்சாட்டிய முதல்வர் மற்றும் இதர அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது ஆளுநரின் அதிகார வரம்பிற்கு உட்பட்டதா என்ற கேள்விக்கு பதிலளித்த பரத்வாஜ், அரசு மற்றும் முதல்வருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வதும், சிபாரிசு செய்வதும் ஆளுநருக்கு மட்டுமே அரசியல் சட்டரீதியான அதிகாரம் உள்ளது என கூறினார்.

மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் வேளையில் முதல்வர் வெளிநாடு சுற்றுப்பயணம் சென்று இருப்பது சரியல்ல என பரத்வாஜ் கூறினார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza