குவைத்:அதிகாரத்தின் நூலிழையில் தொங்கிக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகள், ஹராமும் (தடுக்கப்பட்டது), ஹலாலும் (அனுமதிக்கப்பட்டது) பார்க்காமல் பொருளை சம்பாதிக்கும் பணபலம் படைத்தோரின் உதவியாளர்களாகவும், சேவகர்களாகவும் முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் மாறுவது கவலைக்குரியதும், பெரும் துயரமும் ஆகும் என ஆல் இந்தியா இமாம் கவுன்சில் கேரள மாநில தலைவர் அப்துற்றஹ்மான் பாகவி தெரிவித்துள்ளார்.
குவைத்தில் அப்பாஸியா ரிதம் ஆடிட்டோரியத்தில் குவைத் இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் ஏற்பாடு செய்த ’முஸ்லிம் ஐக்கியம் வாய்ப்பும் தகுதியும்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார் அப்துற்றஹ்மான்.
மார்க்க அறிஞர்கள் நேருக்கு நேராக இருந்து விவாதித்து தீர்க்க வேண்டிய அற்பமான பிரச்சனைகளை கூட நபி(ஸல்…)அவர்களின் வழிமுறையை புறக்கணித்துவிட்டு தொடர்ந்து வீதிகளின் மேடை போட்டு ஒருவரையொருவர் பரிகாசம் செய்வதும், கடித்து குதறுவதும் சமூகத்தின் ஒற்றுமையையும், பாதுகாப்பையும் தகர்ப்பதாக அப்துற்றஹ்மான் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்ச்சிக்கு முஹ்யத்தீன் மாஸ்டர் தலைமை வகித்தார். ஸைஃபுத்தீன் வரவேற்புரையாற்றினார். அப்துல்ஸலாம் நன்றியுரை நவின்றார்.
0 கருத்துரைகள்:
Post a Comment