பாரிஸ்:நேற்று முன்தினம் தாலிபான்களால் விடுதலை செய்யப்பட்ட இரண்டு பிரான்சு நாட்டு பத்திரிகையாளர்கள் நாட்டிற்கு திரும்பினர். ஒன்றரை ஆண்டுகள் பிணைக்கைதிகளாக இருந்த இவர்கள் நாட்டிற்கு திரும்பியவுடன் இதய பூர்வமான வரவேற்பு அளிக்கப்பட்டது. 47 வயதான ஹெர்வ் கிஸ்க்யூர், 46 வயதான ஸ்டீஃபன் டாபொனீர் ஆகியோர் பிரான்சு தொலைக்காட்சிக்காக பணியாற்றிய வேளையில் மூன்று ஆப்கான் உதவியாளர்களுடன் 2009 ஆம் ஆண்டு தாலிபான்களால் கைது செய்யப்பட்டனர்.
நாட்டிற்கு திரும்பிய பத்திரிகையாளர்களுடன் அதிபர் சர்கோஸி, முதல் பெண்மணி கார்லா ப்ரூனி, பாதுகாப்பு அமைச்சர், வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோர் சந்திப்பை நிகழ்த்தினர். கடந்த புதன்கிழமை தாலிபான்கள் ஹெர்வையும், ஸ்டீஃபனையும் விடுதலை செய்தது.
இவர்களின் விடுதலைக்காக பிணைத்தொகை வழங்கவில்லை என பிரான்சு நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், விடுதலை செய்வதற்கு என்ன காரணம் என்பது இதுவரை தெளிவாகவில்லை.
தங்களை தாலிபான்கள் சித்திரவதை செய்யவோ, மோசமாக நடந்துக்கொள்ளவோ செய்யவில்லை என இரண்டு பத்திரிகையாளர்களும் தெரிவித்தனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment