Friday, July 1, 2011

பிரான்சு:சர்கோஸியை காலரை பிடித்து கீழே தள்ளிய இளைஞர்

sarkozy
பாரிஸ்:பிரான்சு நாட்டு அதிபர் நிக்கோலஸ் சர்கோஸியை இளைஞர் ஒருவர் காலரை பிடித்து கீழே தள்ளிவிட்டார். தென்மேற்கு பிரான்சில் ப்ராக்ஸ் நகரத்தில் நடந்த பொது நிகழ்ச்சியில் இச்சம்பவம் நிகழ்ந்தது. தன்னை சுற்றிலும் திரண்டிருந்த மக்களிடம் கைக்குலுக்கியவாறு நகர்ந்து கொண்டிருந்த சர்கோஸியை 32 வயதான தியேட்டர் உரிமையாளரான இளைஞர் ஒருவர் காலரை பிடித்து கீழே தள்ளிவிட்டார்.

திடீரென நடந்த தாக்குதலில் நிலைகுலைந்த சர்கோஸி கீழே விழுந்தார். உடனே பாதுகாப்பு அதிகாரிகள் சர்கோஸியை பிடித்து எழும்பவைத்தனர். தாக்கியவரை கைது செய்து கஸ்டடியில் வைத்துள்ளனர். இளைஞரை பாதுகாப்பு அதிகாரிகள் விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடத்திய இளைஞர் நிராயுதபாணியாக இருந்தார். அவருடைய நோக்கம் என்னவென்று இதுவரை தெரியவில்லை என அதிபரின் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza