Tuesday, July 19, 2011

கராச்சி கலவரக்காரர்களிடமிருந்து இஸ்ரேலிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன

 இஸ்லாமாபாத்:ஏராளமானோரின் மரணத்திற்கு காரணமான கராச்சி கலவரத்தில் வன்முறையாளர்கள் உபயோகித்தது இஸ்ரேலில் தயார் செய்யப்பட்ட ஆயுதங்கள் என கண்டறியப்பட்டுள்ளது. 200 க்கும் அதிகமானோரிடமிருந்து இஸ்ரேலிய ஆயுதங்களை கைப்பற்றியதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் தெரிவித்துள்ளார். ஏ.கே.45 துப்பாக்கிகளும், சிறிய ராக்கெட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கராச்சியின் அமைதியை குலைப்பதன் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள் செயல்படுவது இதன் மூலம் நிரூபணமாகிறது என ரஹ்மான் மாலிக் தெரிவித்துள்ளார். சம்பவத்தை குறித்து விசாரணை துவங்கியுள்ளது. கடந்த சில வாரங்களாக கராச்சியில் நடந்துவரும் கலவரத்தில் நூற்றுக்குமேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த வியாழக்கிழமை நடந்த கலவரத்தில் மட்டும் 15 பேர் கொல்லப்பட்டனர்.30க்குமேற்பட்டோர் காயமடைந்தனர்.

பாகிஸ்தான் பீப்பிள்ஸ் பார்டியின் தலைவர் முத்தஹிதா குவாமி மூவ்மெண்டின் ஸ்தாபகரை அவமதித்து பேசியதற்கு பின்னர் வியாழக்கிழமை மீண்டும் கலவரம் துவங்கியது. இம்மாதம் துவக்கத்தில் ஒருவார காலமாக நடந்த கலவரத்தில் நகரத்தில் 95 பேர் கொல்லப்பட்டனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza