Saturday, July 16, 2011

இணையதளத்தை அதிகம் உபயோகித்தால் நினைவாற்றலை பாதிக்கும்

search
நியூயார்க்:இணையதளத்தை அளவுக்கு அதிகமாக உபயோகித்தால் நினைவாற்றல் பாதிப்பிற்கு உள்ளாகும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மனோதத்துவ துறையின் துணை பேராசிரியர் பெட்ஸி ஸ்பார்ரவ் மற்றும் அவரது குழுவினர் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

கம்ப்யூட்டரில் ஸேவ்(save) செய்த விபரங்களை நினைவுக்கூர்வதில் இணையதளத்தை உபயோகிப்பவர்கள் சிரமப்படுவதாக நான்கு கட்டங்களாக நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்ததாக டாக்டர்.ஸ்பார்ரவ் கூறுகிறார். உதாரணமாக தேசிய கொடியில் ஒரு நிறத்தை மட்டும் இடம்பெற செய்துள்ள நாடு எது? என கேள்வி எழுப்பினால் அதனை நினைவுக்கூர்ந்து பதிலளிக்காமல் உடனடியாக இண்டர்நெட்டில் சென்று ஸெர்ச்சில் (தேடுதலில்) ஈடுபடுகின்றனர்.

நமக்கு தேவையான காரியங்களை நினைவு கூற குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், சக ஊழியர்கள் ஆகியோரை நாடும் முறை முன்னரே உள்ளது. ஆனால் தற்பொழுது நமது எக்ஸ்டேர்னல் ஸ்டோரேஜ் டிவைஸாக இண்டர்நெட் கருதப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இணையதளமும், கம்ப்யூட்டரும் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் மனிதனின் நினைவாற்றலை எவ்வளவுதூரம் மோசமாக பாதிக்கிறது என்பது குறித்து மேலதிகமான ஆய்வை நடத்தவிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza