டமாஸ்கஸ்:சிரியாவின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்துவரும் அரசுக்கு எதிரான போராட்டத்தில் சிரியா ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் எட்டு பேர் கொல்லப்பட்டனர். தலைநகரான டமாஸ்கஸ், வடமேற்கு நகரமான இத்லிப், தரா நகரம் ஆகிய இடங்களில் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் எட்டுபேர் மரணித்தனர்.
நேற்று தலைநகர் உள்பட பல்வேறு நகரங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அரசுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றனர். அவர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மார்ச் மாதம் போராட்டம் துவங்கியதிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற பேரணிகளில் ஒன்று நேற்று நடந்தது என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

0 கருத்துரைகள்:
Post a Comment