Saturday, July 16, 2011

மும்பை குண்டு வெடிப்பு:பாப்புலர் ப்ரண்ட் கண்டனம்

k.m.shareef
புதுடெல்லி:மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. குண்டு வெடிப்பிற்கு காரணமானவர்களை சட்டத்தின் முன்னால் கொண்டுவர தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என அவ்வமைப்பின் பொது செயலாளர் கே.எம்.ஷெரீஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு மும்பையில் மீண்டும் தீவிரவாத தாக்குதல் நடந்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் அப்பாவிகளின் உயிரை பறிப்பதும், நாட்டின் பாதுகாப்பையும், அமைதியையும் சீர்குலைப்பதும் ஆகும். உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டோம் என பாராட்டப்படுவதற்காக நிரபராதிகளை குற்றவாளிகளாக மாற்றும் போக்கு கூடாது என பாப்புலர் ப்ரண்ட் போலீசாருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

குண்டுவெடிப்பின் உண்மையான சூத்திரதாரிகள் கைது செய்யப்பட்டார்கள் என்பதை புலனாய்வு ஏஜன்சிகள் உறுதி செய்ய வேண்டும். ஊகங்களை பரப்புரை செய்வதிலிருந்து ஊடகங்களும், போலீஸ் உள்பட அனைத்து பிரிவு மக்களும் விலக வேண்டும் என கருதுகிறோம். கொல்லப்பட்டவர்களின் உறவினர்களின் சோகத்தில் பங்கேற்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய பிராத்திக்கிறோம். இவ்வாறு கே.எம்.ஷெரீஃப் கூறியுள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza