Tuesday, July 19, 2011

எஸ்.டி.பி.ஐ உத்தரபிரதேச மாநில தலைவராக வழக்கறிஞர் ஷரஃபுதீன் தேர்வு

கான்பூர்:சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கட்சியின் உ.பி மாநில தலைவராக வழக்கறிஞர் ஷரஃபுதீன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கான்பூர் மர்ச்சண்ட் கிளப்பில் நடந்த தலைமை நிர்வாகிகள் கூட்டத்தில் மாநில கமிட்டி தேர்ந்தெடுக்கப்பட்டது.குர்ஷித் ஜாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.தேசிய தலைவர் இ.அபூபக்கர் கூட்டத்தை துவக்கி வைத்து உரை நிகழ்த்தினார். அப்பொழுது அவர் கூறியதாவது:இந்தியாவில் மிகவும் ஜனநாயக பண்புகளுடன் செயல்படும் கட்சி எஸ்.டி.பி.ஐ ஆகும். ஒவ்வொரு விஷயத்திலும் விரிவான விவாதங்களுக்கு பிறகு எஸ்.டி.பி.ஐ தனது கொள்கைகளை உருவாக்குகிறது. விழுமியங்களின் அடிப்படையிலான அரசியலை தான் எஸ்.டி.பி.ஐ முன்வைக்கிறது என அவர் கூறினார்.

வெறும் ஒரு அரசியல் கட்சி என்பதைவிட ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு சம வாய்ப்புகளை அளிப்பதற்கான ஒரு புனித பணியை மேற்கொண்டுள்ள குழுதான் எஸ்.டி.பி.ஐ என முடிவுரையில் எஸ்.டி.பி.ஐயின் தேசிய பொதுச்செயலாளர் எ.ஸயீத் கூறினார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza