Saturday, July 16, 2011

நாடு செல்வது தவறான பாதையை நோக்கி-அமெரிக்க குடிமக்கள்

வாஷிங்டன்:அமெரிக்கா தவறான பாதையில் சென்று கொண்டிருப்பதாக அந்நாட்டு மக்கள் கருதுகின்றனர். ராய்ட்டர்ஸ்/இப்ஸோஸ் நடத்திய ஆய்வில் 63 சதவீத மக்களும் நாட்டின் தற்போதைய நிலைப்பாட்டில் திருப்தி இல்லை என்பது தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் அதிகரித்துவரும் வேலையில்லா திண்டாட்டத்தை போக்க பட்ஜெட்டில் போதுமான திட்டங்கள் எதுவும் கூறப்படாதது அமெரிக்கர்களை தங்கள் நாட்டு அரசாங்கத்தின் மீது அதிருப்தி ஏற்பட வழிவகைச்செய்துள்ளது. மே முதல் வாரம் அமெரிக்க பத்திரிகைகளான வாஷிங்டன் போஸ்டும், நியூயார்க் டைம்ஸும் நடத்திய சர்வேயில் அல்காயிதா தலைவர் உஸாமா பின்லேடனை கொலைச் செய்த சம்பவம் ஒபாமாவின் மீதான நம்பிக்கை அமெரிக்கர்களிடம் அதிகரித்துள்ளதாக தெரியவந்தது. 57 சதவீதம் பேரும் ஒபாமாவின் செயலை புகழ்த்தியிருந்தனர். இந்த சர்வே நடத்தி சில வாரங்களுக்கு பிறகு புதிய சர்வே முடிவு வெளிவந்துள்ளது.

அமெரிக்க குடிமக்கள் சந்திக்கும் கடுமையான வேலையில்லாத் திண்டாட்டம் உள்பட பல்வேறு பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காணவில்லை எனில் ஒபாமாவிற்கு மக்கள் ஆதரவு மேலும் சரியும் என சர்வே கூறுகிறது.

அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் ஒபாமா கடுமையான சவாலை சந்திப்பார் என இப்ஸோஸ் செய்தி தொடர்பாளர் ஜூலி க்ளார்க் தெரிவிக்கிறார்.

முன்னாள் அதிபர் ஜார்ஜ்புஷ் தலைமையிலான குடியரசுக்கட்சியினர் வருமான வரியை அதிகரித்து வருமானத்தை அதிகரிக்க முயன்றபொழுது ஒபாமாவின் தலைமையிலான ஜனநாயக கட்சியினர் வரியை அதிகரிப்பதை எதிர்த்துவிட்டு சமூக பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய பரிபாலனம் போன்ற மக்கள் சேவை செலவுகளை வெட்டிக் குறைக்க தீர்மானித்துள்ளனர். அமெரிக்க ஊடக நிறுவனமான ரஸ்மூஸன் தொலைபேசி மூலமாக நடத்திய இன்னொரு சர்வேயில் 25 சதவீத பேர் மட்டுமே நாடு சரியான வழியில் செல்வதாக நம்புகின்றனர்.

குடியரசு கட்சியின் ஆதரவாளர்களான 88 சதவீதம் பேரும், ஒரு கட்சியையும் ஆதரிக்காத 68 சதவீதம் பேரும் சர்வேயில் அமெரிக்க அரசின் தற்போதைய செயல்பாட்டில் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza