ஐ.நா:ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்பு ராணுவம் நடத்திவரும் சிவிலியன் கூட்டுப்படுகொலை சாதனை படைத்துள்ளதாக ஐ.நா மதிப்பீடுச்செய்துள்ளது. கடந்த 2001 ஆம் ஆண்டு துவங்கிய ஆப்கான் ஆக்கிரமிப்பில் மிக அதிகமான சிவிலியன்களின் மரணம் கடந்த ஆறு மாதங்களில் நடந்தேறியது. 2010 ஆம் ஆண்டு முதல் பகுதியை கழித்தால் மரண எண்ணிக்கை 15 சதவீதம் அதிகரித்துள்ளது. 1462 அப்பாவி மக்கள் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர் என ஐ.நா மிஷன் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளையில் சாதாரண மக்களின் மரண எண்ணிக்கை உயர காரணம் அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்பு ராணுவம் நடத்திவரும் விமானத் தாக்குதல்கள் தாம் எனினும், ஐ.நா அறிக்கையில் அமெரிக்காவை குற்றமற்றதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. போராளிகள் தாக்குதல்தாம் சிவிலியன் மரணங்களுக்கு காரணமாம். அண்மையில் விரைவில் ஆப்கானிலிருந்து அமெரிக்க ராணுவத்தை வாபஸ் பெறபோவதாக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அறிவித்தபோதிலும் ராணுவம் வாபஸ் பெறுவது ஆப்கானில் மோதலையும், உள்நாட்டு போரையும் அதிகரிக்க வழிவகைச்செய்யும் என ஐ.நாவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:
Post a Comment