Tuesday, July 26, 2011

சிரியாவில் அரசியல் கட்சிகளுக்கு அனுமதி அளிக்கும் சட்டம்

 
syriaடமாஸ்கஸ்:ஆளுங்கட்சியான பாஅஸ் கட்சியை தவிர அரசியல் கட்சிகளுக்கு அனுமதி அளிக்கும் சட்டத்தின் வரைவை சிரியா அரசு தயாரித்துள்ளது. ஆனால் மதம், இனம், பிரதேசம் அடிப்படையிலான கட்சி உருவாக்கத்தை சட்டம் தடை செய்கிறது. மார்ச் மாதம் சிரியாவில் துவங்கிய அரசு எதிர்ப்பு போராட்டத்திற்கு தலைமை வகிப்பவர்களின் முக்கிய கோரிக்கை பல கட்சி முறையை கொண்டுவர வேண்டும் என்பதாகும்.

1963-ஆம் ஆண்டு ஆட்சி கவிழ்ப்பு மூலம் பதவிக்கு வந்த பாஅஸ் கட்சி எதிர்கட்சிகளுக்கு தடை விதித்தது. அரசியல் சட்டத்தின்படி பாஅஸ் கட்சிதான் சமூகத்திற்கும், அரசியலுக்கும் தலைமை வகிக்கவேண்டும். அரசியல் அதிகாரத்தில் மாற்றத்தை கொண்டுவர அனுமதித்தல், மக்களின் அரசியல் வாழ்க்கையை சக்திப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டு புதிய சட்டம் கொண்டுவரப்படுவதாக அரசு செய்தி நிறுவனமான ஸனா கூறுகிறது.ஜனநாயக தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டு கட்சிகள்             செயல்படவேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே வெள்ளிக்கிழமை ஐந்துலட்சம் பேர் பங்கேற்ற அரசு எதிர்ப்பு போராட்டம் நடைபெற்ற தீர் அஸ்ஸூரில் ஆளுநர் ஹுஸைன் அர்நோஸியை அதிபர் பஸ்ஸாருல் ஆசாத் பதவியிலிருந்து நீக்கியுள்ளார்.

ரகசிய உளவுப்பிரிவு அதிகாரியான சமீர் ஒல்மான் அல் ஷேக் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza