Tuesday, July 26, 2011

பாப்ரி மஸ்ஜிதை இடித்ததில் நரசிம்மராவுக்கு பங்குண்டு – மணிசங்கர் அய்யர்

 
manisangariyarபுதுடெல்லி:1992-ஆம் ஆண்டு டிசம்பர்-6ம் தேதி நடந்த பாப்ரி மஸ்ஜித் இடிப்பிற்கு காரணமானவர் அன்றைய பிரதமராக பதவி வகித்த நரசிம்மராவ் என மூத்த காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் அய்யர் தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர் ரஷீத் கித்வாய் எழுதிய இரண்டாவது புத்தகமான ’24, Akbar Road’ வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டு ’காங்கிரசின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்’ என்ற தலைப்பில் உரையாற்றினார் மணிசங்கர் அய்யர்.


அப்பொழுது அவர் கூறியதாவது: இந்திய அரசியலில் கருத்துவேறுபாடு என்பது வலதுசாரி பொருளாதார கொள்கைக்கும், இடதுசாரி பொருளாதார கொள்கைக்கும் இடையே அல்ல. இந்த நாடு மதசார்பற்ற நாடாக தொடரவேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்தாகும்.

நான் ராம்-ரஹீம் யாத்திரை நடத்தியபோது என்னிடம் பேசிய ராவ், மதசார்பின்மை கொள்கையை என்னால் ஒத்துக்கொள்ளமுடியாது என கூறினார். ஏன்? என வினவியபோது அவர் கூறினார், ’இந்தியா ஹிந்துநாடு என்பதை நீ மறந்துபோகிறாய்’ என அவர் பதிலளித்தார். ராவுக்கும், காங்கிரசுக்கும் இடையேயான கருத்துவேறுபாடு இதனைக் குறித்தாகும்.

காங்கிரஸ் என்றால் சர்க்கஸ் கூடாரம் போன்றதாகும். காங்கிரஸில் உறுப்பினரானால் அந்த சர்க்கஸில் பங்காளியாக மாறுகிறோம் என்று பொருளாகும். சிலவேளை உங்களுக்கு ஆதாயம் கிடைக்கலாம். சில வேளை தோல்வியும் உருவாகும். எப்பொழுதாவது ஆதாயம் கிடைக்கும் என உறுதியாக இருப்பவர்களுக்கு ஏதேனும் கிடைக்கலாம்’ இவ்வாறு மணிசங்கர் அய்யர் கூறினார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza