Monday, July 25, 2011

மும்பை குண்டுவெடிப்பு:புலனாய்வு ஏஜன்சிகள் இடையே கருத்து வேறுபாடு

 
33007-city-imageமும்பை:மும்பை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்திவரும் புலனாய்வு ஏஜன்சிகள் மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

புலனாய்வு ஏஜன்சிகளிடையே பிளவு தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து தேசிய புலனாய்வு ஏஜன்சி குழுவினர் மும்பையிலிருந்து திரும்பிவிட்டனர். புலனாய்வு ஏஜன்சிகள் இடையே ஒருங்கிணைப்பு இல்லை எனக்குற்றஞ்சாட்டி என்.ஐ.ஏ குழு திரும்பிவிட்டதாக கருதப்படுகிறது.


22 பேரின் மரணத்திற்கு காரணமான தொடர் குண்டுவெடிப்பைக் குறித்து விசாரணையை ஒருங்கிணைக்க மும்பை தாக்குதலின் பின்னணியில் உருவான என்.ஐ.ஏ அதிகாரிகள் மும்பைக்கு வருகைத் தந்தனர். ஆனால், மஹராஷ்ட்ரா ஏ.டி.எஸ்ஸும், க்ரைம் ப்ராஞ்சும் தேசிய புலனாய்வு ஏஜன்சியுடன் ஒத்துழைக்க மறுத்துள்ளன. ஏ.டி.எஸ், என்.ஐ.ஏ அதிகாரிகள் மத்தியில் வாக்குவாதம் ஏற்பட்டு வழக்கை விசாரிக்க என்.ஐ.ஏவுக்கு விசாரணையை நிறைவுச்செய்ய முடியாது என ஏ.டி.எஸ் விமர்சித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், இச்சம்பவம் சர்ச்சையை கிளப்பியதை தொடர்ந்து தலை தப்புவதற்காக இரு பிரிவினரும் மறுப்பு அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.

என்.ஐ.யுடன் கருத்துவேறுபாடு இல்லை என மஹராஷ்ட்ரா ஏ.டி.எஸ்ஸின் தலைவர் ராகேஷ்மரியா கூறுகிறார். ஜூலை 13-ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்புகள் விசாரணை தொடர்பாக மஹராஷ்ட்ரா ஏ.டி.எஸ்ஸுடன் கருத்துவேறுபாடு இல்லை என என்.ஐ.ஏ கூடுதல் இயக்குநர் ஜெனரல் பிரகாஷ் மிஷ்ரா கூறியுள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza