கோழிக்கோடு:சுதந்திர தினத்தையொட்டி வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதி கேரள மாநிலத்தில் 4 இடங்களில் சுதந்திர தின அணிவகுப்பை நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைமைச்செயலகம் தீர்மானித்துள்ளது.
புனலூர்,சாவக்காடு, மஞ்சேரி, தாமரச்சேரி ஆகிய இடங்களில் அணிவகுப்பை நடத்த முடிவுச் செய்யப்பட்டுள்ளது.
2004 ஆம் ஆண்டு முதல் கேரளாவின் பல்வேறு பகுதிகளிலும், தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களில் கடந்த 2008-ஆம் ஆண்டிலிருந்தும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சுதந்திர தின அணிவகுப்பை நடத்திவருகிறது. மக்களிடம் சுதந்திரத்தின் உணர்வையும், தேசப்பற்றையும் சுடர்விட்டு ஒளிரச்செய்ய இத்தகைய நிகழ்ச்சிகளை ஏற்பாடுச் செய்வதாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைமைச் செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிகழ்ச்சி வெற்றியடைய அனைத்து பிரிவினர்களிடமும் பாப்புலர் ஃப்ரண்ட் தலைமைச்செயலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment