மும்பை :மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் குண்டுவைத்ததாக கருதப்படும் நபரைக் குறித்த முக்கியத்துவம் வாய்ந்த விபரம் கிடைத்துள்ளதாக மஹாராஷ்ட்ரா மாநில தீவிரவாத தடுப்பு படை அறிவித்துள்ளது.
போலீஸ் தயார் செய்த வரைபடத்திலிருந்து முக்கிய தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் நாட்டின் மத்திய பகுதியையோ அல்லது வடக்கு பகுதியையோ சார்ந்தவராவார். இவரை பிடிக்க மத்தியபிரதேஷ், டெல்லி, ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் போலீஸ் குழுக்களை அனுப்பியுள்ளதாக மூத்த ஏ.டி.எஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் நபரின் வரைபடத்தை குண்டுவெடிப்பு வழக்கை புலனாய்வு செய்துவரும் 12 குழுக்களில் தேர்வுச்செய்யப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கப்பட்டிருந்தது. விசாரணையின் ஒரு பகுதியாக ஒருலட்சத்திற்கும் அதிகமான தொலைபேசி அழைப்புகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதில் சில எண்கள் கண்காணிப்பில் உள்ளன.
மத்தியபிரதேசம், கொல்கத்தா ஆகிய இடங்களுக்கோ, குஜராத்திற்கோ சந்தேகத்திற்கிடமான தொலைபேசி அழைப்புகள் சென்றுள்ளன.
0 கருத்துரைகள்:
Post a Comment