Sunday, July 31, 2011

லிபியா:எதிர்ப்பாளர்கள் ராணுவ தளபதியின் கொலையின் பின்னணியில் எதிர்ப்புக் குழு

 
Abdul-Fatah-Younis-007திரிபோலி:லிபியாவில் முஅம்மர் கத்தாஃபியின் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திவரும் எதிர்ப்பாளர்களின் ராணுவ தளபதி அப்துல் ஃபதா யூனுஸின் கொலையின் பின்னணியில் எதிர்ப்புக்குழு செயல்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்ப்பாளர்களுடன் நெருங்கிய தொடர்புடைய இஸ்லாமிய போராளி பிரிவான உபைத் இப்னு ஜராஹ் ப்ரிகேடர் என பெங்காசியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எதிர்ப்பாளர்கள் குழுவின் எண்ணைய்த்துறை அமைச்சர் அலி துர்ஹூனி தெரிவித்துள்ளார்.
 

முஅம்மர் கத்தாஃபிக்கு நெருக்கமான யூனுஸ் அரசுக்கு எதிரான போராட்டம் துவங்கிய பிப்ரவரி மாதம் கட்சி தாவி எதிர்ப்பாளர்கள் பக்கம் சேர்ந்தார். யூனுஸின் மரணம் குறித்து போராளி தலைவர் தகவல் அளித்ததாக தர்ஹூனி தெரிவித்துள்ளார். பெங்காசிக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட வேளையில் யூனுஸும், அவரது இரண்டு உதவியாளர்களும் கொல்லப்பட்டனர். யூனுஸின் உடல் எரிக்கப்பட்ட நிலையில் உள்ளது. கொலைக்கு என்ன காரணம் என வினவியபொழுது அதுக்குறித்து விசாரணை நடத்திவருவதாக  தர்ஹூனி கூறினார்.

எதிர்ப்பாளர்களுக்கு நாட்டை ஆளும் தகுதி இல்லை என்பதன் உதாரணம்தான் யூனுஸின் மரணம் என கத்தாஃபியின் அரசு குற்றம் சாட்டியுள்ளது. கமாண்டரை பாதுகாக்க இயலாதவர்கள் எவ்வாறு நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிச்செய்வார்கள்? என அரசு செய்தி தொடர்பாளர் மூஸா இப்ராஹீம் வினவினார். இக்கொலையில் அல்காயிதாவுக்கு தொடர்பிருப்பதாக அவர் குற்றம் சாட்டினார். அதேவேளையில் கொலையை குறித்து விசாரணை நடத்த எதிர்ப்பாளர்கள் அரசு சிறப்புக் குழுவை நியமித்துள்ளது. விசாரணக்கு பிறகு அனைத்து விபரங்களும் தெளிவாகும் என எதிர்ப்பாளர்கள் அரசு அறிவித்துள்ளது.

இவ்வேளையில் லிபியா அரசின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி நிலையத்தில் குண்டுவீசியதாக நேட்டோ அறிவித்துள்ளது. மூன்று சேட்டிலைட் டிஷ்ஷுகள் தாக்குதலில் தகர்ந்துள்ளன.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza