நரைமுடி என்பது பலரது தலையாய பிரச்சனை. எளிய தீர்வாக கறிவேப்பிலை, மருதாணி போன்வற்றை கொண்டு கைவைத்தியம் செய்து வருவது என்பது பழைய கால பழக்கமாகி விட்டது.
தற்போது பியூட்டி பார்லர்களுக்கு படையெடுத்து பணத்தை தண்ணீராக வாரி இறைத்து வருகின்றனர். ஆனால் முழு பலன் கிடைக்காமல் புலம்புவது தான் மிச்சம்.
வயது வித்தியாசமின்றி சிறியவர், பெரியவர் என அனைவரும் இப்பிரச்னையால் அவதிப்படுவது அதிகரித்து வருகிறது. பரம்பரை, உணவுப்பழக்கம் எல்லாம் காரணமாக கூறப்பட்டாலும் தீர்வு கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்நிலையில் இதுகுறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் வின்ட் அல்லது டபிள்யூ.என்.டி என்ற பிரத்யேக புரோட்டீன் குறைபாடு காரணமாகவே நரைமுடி ஏற்படுவது தெரியவந்துள்ளது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
நியூயார்க் பல்கலைக்கழக லங்கோன் மருத்துவ மையம் சார்பில் இந்த ஆய்வு நடந்தது. இதுகுறித்து வெளியாகி உள்ள தகவல்கள் வருமாறு:
முடிகளின் நிறமாறுதலுக்கு காரணமான டபிள்யூ.என்.டி என்ற புரதம் தான் நரைமுடி பாதிப்பையும் ஏற்படுத்துகிறது.
நாம் உட்கொள்ளும் மருந்து மாத்திரைகள், பயன்படுத்தும் ஷாம்புகள், எண்ணெய், லோஷன்களால் இந்த டபிள்யூ.என்.டி என்ற புரதத்தின் செயல்பாடு பாதிக்கப்படும். இந்த பாதிப்பு அதிகரிக்கும் போது நரைமுடி தோன்றுகிறது.
ஆரம்ப கட்டத்தில் அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சையால் இந்த பாதிப்பை முற்றிலும் குணப்படுத்த முடியும். கவனிக்காமல் விட்டால் நரைமுடி அதிகரிக்கும். இதற்காக கொடுக்கப்படும் மருந்துகள் ஸ்டெம் அல்லது தாய் செல்களின் செயல்பாடுகளை தூண்டி டபிள்யூ.என்.டி புரதத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும்.
இது முடிகளின் இயல்பான கருமை நிறத்துக்கு வகை செய்யும். இந்த குறைபாட்டை சீர்செய்யும் போது முடி உதிர்வது கட்டுப்படுத்தப்பட்டு வளர்ச்சியை அதிகரிக்கும். இத்தகைய முறையில் இயற்கையான பாதுகாப்பும் ஆரோக்கியமும் உறுதி. இதனால் எந்த பக்க விளைவுகளோ பாதிப்போ இல்லை.
0 கருத்துரைகள்:
Post a Comment