திருநெல்வேலி:குடும்பத்தின் செலவுகளுக்காக பிறந்து ஒரு மாதமே ஆகியுள்ள பெண் குழந்தையை வேலையில்லாமல் திரிந்த நபர் ரூ.40 ஆயிரத்திற்கு விற்ற தந்தையை போலீசார் கைதுச்செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் ஆத்தங்கரை பள்ளிவாசலை சேர்ந்தவர் செய்யது யூசுப்(45). டீக்கடை ஒன்றில் வேலைபார்த்து வருகிறார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்பட மூன்று குழந்தைகள் உள்ளனர். கடந்த ஜூன் 1 ல், நான்காவதாக பெண் குழந்தை பிறந்தது. குடிப்பழக்கம் உள்ள செய்யது யூசுப் தமது நான்காவது குழந்தையை குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருந்த சாத்தான்குளத்தை சேர்ந்த காளிமுத்து(55) க்கு விற்றுவிட்டார்.
காளிமுத்து தற்போது மும்பையில் வசிக்கிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர் பணத்தை வாங்கிவிட்டு குழந்தையை காளிமுத்துவிற்கு விற்றுள்ளார். குழந்தையை விற்ற காசில் மது அருந்தியதைத் தொடர்ந்து அவரது மனைவி இதுக்குறித்து போலீசாரிடம் புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து போலீசார் குழந்தையை மீட்டு சரணாலயம் தொண்டு நிறுவனத்தில் ஒப்படைத்தனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment