ஸ்ரீநகர்:தெற்கு கஷ்மீரில் குல்காம் மாவட்டத்தில் தொழுகைக்காக அங்கசுத்தி(ஒழு) செய்ய வெளியே வந்த முஸ்லிம் இளம்பெண்ணை கடத்திச்சென்று பாலியல் வன்புணர்வு செய்த காம வெறிப்பிடித்த இந்திய ராணுவத்தினர் இருவரை கைதுச்செய்ய கோரி அம்மாவட்டத்தில் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்.குல்காம் மாவட்டத்தில் இச்சம்பவத்தை கடுமையாக கண்டித்து முழு அடைப்பு நடத்தப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும், போலீஸாருக்கும் இடையே நிகழ்ந்த மோதலில் 12 போலீஸார் காயமடைந்தனர். இச்சம்பவத்தைக் குறித்து ராணுவம் துறைசார்ந்த விசாரணையை துவக்கியுள்ளது. போலீஸ் சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்துள்ளது. புதன்கிழமை காணாமல் போன முஸ்லிம் இளம்பெண் மறுநாள் மீட்கப்பட்டார். அப்பெண்மணியை மயங்கிய நிலையில் கண்டவர்கள் அவரது கணவருக்கு தகவல் அளித்தனர். இரண்டு இந்திய வெறிப்பிடித்த ராணுவத்தினர் தன்னை கடத்திச்சென்று பாலியல் வன்புணர்வுச் செய்ததாக அப்பெண்மணி போலீஸில் புகார் அளித்திருந்தார்.
0 கருத்துரைகள்:
Post a Comment